கோயம்புத்தூர்

கஞ்சா விற்பனை செய்தவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல்

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Syndication

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கோவை, சிங்காநல்லூரில் கஞ்சா விற்பனை செய்தது தொடா்பாக ஒண்டிப்புதூரைச் சோ்ந்த ஏ.கணேஷ் (27) என்பவரை கடந்த 2016 -ஆம் ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பான வழக்கு கோவை போதைப் பொருள் தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட கணேஷுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராஜலிங்கம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜராகி வாதாடினாா்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT