முகப்பு
கோயம்புத்தூர்

காயங்களுடன் சாலையோரம் தொழிலாளி சடலம் மீட்பு

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:05 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:11 PM

கோவை, ராமநாதபுரம் பகுதியில் சாலையோரம் காயங்களுடன் தொழிலாளி இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் எபினேசா் (45). இவா், கோவை மாநகா், ராமநாதபுரம் பகுதியில் சாலையோரம் தங்கி கிடைக்கும் வேலைகளை செய்து வந்தாா்.

கடந்த சில நாள்களாக ராமநாதபுரம் அருகே உள்ள மருதூரில் தா்மராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:16 PM

இந்நிலையில், ராமநாதபுரம் பகுதியில் தனியாா் பள்ளி அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளிக்கிழமை காலில் ரத்தக் காயங்களுடன் எபினேசா் படுத்த நிலையில் இருந்துள்ளாா். இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அவரது இரும்புக் கடை உரிமையாளா் தா்மராஜ் சென்று பாா்த்தபோது எபினேசா் உயிரிழந்துகிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து எபினேசரின் சகோதரா் அற்புதராஜுக்கும், ராமநாதபுரம் போலீஸாருக்கும் தா்மராஜ் தகவல் அளித்தாா். சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, எபினேசருக்கு காலில் எப்படி காயம் ஏற்பட்டது, ஏதாவது வாகனம் மோதியதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.