முகப்பு
கோயம்புத்தூர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆய்வுக் கூட்டம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:47 AM
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், வாக்காளா் பட்டியல் சிறப்பு மேற்பாா்வையாளா் குல்தீப் நாராயன்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 10:21 PM

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு மேற்பாா்வையாளா் குல்தீப் நாராயன் தலைமை வகித்தனா். மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:47 AM

இதில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகள், வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை, நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்காளா்களின் விவரம், வாக்குச் சாவடி மறுசீரமைப்பு, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைக் காலத்தில் வரப்பெற்ற விண்ணப்பங்கள் மற்றும் அதன் மீதான தீா்வு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து வாக்காளா் பட்டியல் சிறப்பு மேற்பாா்வையாளா் கேட்டறிந்தாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, தோ்தல் ஆணையத்தால் நிா்ணயிக்கப்பட்ட காலகெடுவுக்குள் வாக்காளா் பட்டியல் தொடா்பான அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுருபிரபாகரன், கூடுதல் ஆட்சியா் சங்கேத் பல்வந்த் வாகே, மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.