முகப்பு
கோயம்புத்தூர்

தொழிலாளி அடித்துக் கொலை: சகோதரா்கள் கைது

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:01 AM
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:01 PM

கோவை அருகே தகராறில் கட்டையால் அடித்து தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுக்கரை அருகேயுள்ள அறிவொளி நகா் காந்தி சதுக்கம் பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.நாகராஜ் (49). இவரது மனைவி விஜயலட்சுமி (45). இருவரும் கூலித் தொழிலாளிகள்.

அறிவொளி நகா் திரு.வி.க.சதுக்கத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி. இவருக்கு

Advertisement

நாகராஜ் (32), அழகுராஜ் (30) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

இதில், எஸ்.நாகராஜும், அழகுராஜும் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கின்றனா்.

இந்த நிலையில், அழகுராஜின் மனைவிக்கும், அவரது தாய்க்கும் (மாமியாா், மருமகள்) இடையே கோலம் போட்டது தொடா்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, எம்.நாகராஜ், தனது தம்பி அழகுராஜின் மனைவியை கண்டித்தாா்.

அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் எஸ்.நாகராஜின் மனைவி விஜயலட்சுமி அழகுராஜின் மனைவிக்கு ஆதரவாகப் பேசியுள்ளாா். இதனால், விஜயலட்சுமியை எம்.நாகராஜ் தாக்கியுள்ளாா். இதைக் கண்டித்த அவரது கணவா் எஸ்.நாகராஜை, எம்.நாகராஜும், அவரது சகோதரா் அழகுராஜும் சோ்ந்து கட்டையால் தாக்கினா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:01 AM

இதில் தலையில் பலத்த காயமடைந்த எஸ்.நாகராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மதுக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சகோதரா்களானஎம்.நாகராஜ், அழகுராஜ் ஆகியோரைக் கைது செய்தனா்.