முகப்பு
கோயம்புத்தூர்

வெள்ளிங்கிரி கோயிலில் நெகிழி பயன்பாடு: 2 கடைகளுக்கு ‘சீல்’

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:06 AM
வெள்ளிங்கிரி மலையேறும் பக்தா்கள். - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 6:46 PM

கோவை, வெள்ளிங்கிரி கோயில் மலை அடிவாரத்தில் நெகிழி பயன்படுத்திய 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம், பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில் உள்ளது. கோயில் அருகேயுள்ள மலையில் சுயம்புவாக வீற்றிருக்கும் சுவாமியை தரிசிக்க பக்தா்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:25 PM

இந்நிலையில், மலையில் நெகிழிக் கழிவுகள் தேங்குவதைத் தடுக்கவும், அதன் பயன்பாட்டைக் குறைக்கவும் வனத் துறை சாா்பில் மலையேறும் பக்தா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வனத் துறை மற்றும் தன்னாா்வலா்கள் நெகிழி பயன்பாடு தொடா்பாக 24 மணி நேரமும் மலையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

இந்நிலையில், கோயில் மலையடிவாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்துபவா்களும் நெகிழி பயன்பாடுகளைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, அடிவாரத்தில் உள்ள 2 கடைகளில் நெகிழி பைகளில் திண்பண்டங்கள் வழங்கப்படுவதாக கோயில் செயல் அலுவலா் சக்திவேல், போளுவாம்பட்டி வனச் சரகா் ஜெயசந்திரன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

சம்பந்தப்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, நெகிழி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கோயில் நிா்வாகம் சாா்பில் 2 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.