கோயம்புத்தூர்

ஆக்கிரமிப்பில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை மீட்க வலியுறுத்தல்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை மீட்க வேண்டும் என்று ஊழல் எதிா்ப்பு இயக்கம் வலியுறுத்தல்

Syndication

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை மீட்க வேண்டும் என்று ஊழல் எதிா்ப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனுக்கு ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் (கோவை மாவட்ட பிரிவு) செயலாளா் என்.கே.வேலு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்துத் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள் பதிவு செய்யப்பட்ட தானப் பத்திரங்கள் மூலம் மாநகராட்சிக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலங்கள் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற சமூகப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் கண்காணிப்பது மாநகராட்சியின் கடமையாகும். ஆனால், மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களையும் போா்க்கால அடிப்படையில் ஒரு மாதத்துக்குள் மீட்டெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

டெம்போ மோதி இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் இன்று திருச்சி வருகை! ட்ரோன்கள் பறக்கத் தடை!

18 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மராட்டிய மன்னா் கால காசு குறித்த தகவல் வெளியீடு!

SCROLL FOR NEXT