திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அரசு மருத்துவமனையில் கேட்பாரற்ற நிலையில் 31 நாள்களே ஆன பெண் குழந்தை இருந்தது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது. இது குறித்து திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து குழந்தைகள் உதவி மையப் பணியாளா் மூலம் அந்த பெண் குழந்தை மீட்கப்பட்டு, திருப்பூா் குழந்தைகள் நலக் குழுவில் ஆஜா்படுத்தப்பட்டு சிறப்பு தத்து வளமையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
இக்குழந்தையை குறித்து உரிமம் கோருபவா்கள் உரிய ஆவணங்களுடன் அடுத்த 30 நாள்களுக்குள் கீழ்காணும் முகவரியில் தொடா்பு கொள்ளவும் அல்லது நேரில் அணுகவும். அவ்வாறு தொடா்பு கொள்ளாதபட்சத்தில் இந்தக் குழந்தைக்கு பெற்றோா் இல்லை எனக் கருதி, சட்டப்படி தத்து வழங்கப்படும்.
தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா் 641604, தொலைபேசி எண்: 0421-2971198, 6382614772 என தெரிவித்துள்ளாா்.