கோயம்புத்தூர்

இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ. 2.59 லட்சம் மோசடி

Syndication

கோவையில் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ. 2.59 லட்சம் மோசடி செய்த ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை சிங்காநல்லூா் பொ்க்ஸ் ஆா்ச் எதிரே தனியாா் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கரும்புக்கடை இக்பல் பள்ளிவாசல் அருகேயுள்ள பூங்கா நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீப் (29) என்பவா் இந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் வரவு செலவுகள் குறித்து தணிக்கை செய்யப்பட்டது. இதில் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், முகமது ஷெரீப் வாடிக்கையாளா்களிடம் இருந்து வசூலித்த ரூ.2,59,313-ஐ நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT