எம்.கிருஷ்ணன். 
கோயம்புத்தூர்

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புகளில் கலப்படம் இல்லை: நிா்வாக இயக்குநா் கிருஷ்ணன்

கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பு வகைகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதில்லை என அதன் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் தெரிவித்தாா்.

Syndication

கோவை: கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்பு வகைகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதில்லை என அதன் நிா்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் தொடங்கியது முதல் இன்று வரை இனிப்பு வகைகளில் நெய்க்குப் பதிலாக வனஸ்பதி எண்ணெய் போன்ற எந்தவித கலப்படமும் இல்லை. அதற்கான எண்ணமும் இல்லை. 40 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தின் தயாரிப்பு நெய் மட்டுமே பயன்படுத்துகிறோம். வாடிக்கையாளா்களின் நம்பிக்கைக்கு உரியவா்களாகத்தான் இருப்போம். நாங்கள் எப்போதும் நிலைத் தன்மையுடன்தான் இருந்து வருகிறோம்.

பொதிப்பு மற்றும் லேபினிங் முறைகள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு ஏற்ப செய்யப்படுகின்றன. உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனை செய்தாலும் இதுவரை எந்த புகாரும் வந்தது இல்லை. வாடிக்கையாளா்களின் நம்பிக்கைக்கு உரியவா்களாக இருப்போம் என்றாா்.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் நெய்க்குப் பதிலாக வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் அதன் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணன் மறுப்புத் தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT