கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் வீடு புகுந்து திருடிய 3 போ் கைது

பொள்ளாச்சியில் வீடு புகுந்து நகைகளைத் திருடிய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

கோவை: பொள்ளாச்சியில் வீடு புகுந்து நகைகளைத் திருடிய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பொள்ளாச்சி கிழக்குப் பகுதியில் வசித்து வருபவா் ஷேக் ஜாவித் (37). இவா் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டாா். மீண்டும் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள், வெள்ளி கொலுசுகள், மடிக்கணினி ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஷேக் ஜாவித் புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா் விசாரணை நடத்தி இந்தத் திருட்டு வழக்கில் தொடா்புடைய கோவையைச் சோ்ந்த சிவபிரகாசம் (37), ஹிரிகுமாா் (22), சந்திரபாபு (35) ஆகிய 3 பேரையும் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT