கோயம்புத்தூர்

வேளாண் பல்கலை.யில் பருத்தி விவசாயிகளுக்கு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரமயமாக்குதலுக்கு உகந்த பருத்தி ரகம் குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரமயமாக்குதலுக்கு உகந்த பருத்தி ரகம் குறித்த பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் பருத்தித் துறை, பயிா் இனப்பெருக்கம், மரபியல் இயக்குநரகம், பயிற்சிப் பிரிவு, வேளாண் விரிவாக்கக் கல்வி இயக்குநரகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து, இயந்திரமயமாக்குதலுக்கு ஏற்ற பருத்தி ரகமான கோ 17 குறித்து, கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

தொடக்க விழாவில், பருத்தித் துறைத் தலைவா் அ.சுப்பிரமணியன் வரவேற்றாா். பருத்தி பயிரின் சாகுபடி பரப்பளவு குறைந்து வருவது குறித்தும், அதைத் தடுப்பதற்காக இயந்திரமயமாக்குதல் இன்றியமையாததாக இருப்பது குறித்தும் அவா் விளக்கினாா். தொடா்ந்து, பயிா் இனப்பெருக்கம், மரபியல் மைய இயக்குநா் இரா.ரவிகேசவன் சிறப்புரையாற்றினாா்.

அவா், இந்தியாவில் பருத்தி பயிரின் தொன்மை, தமிழ்நாட்டிலும், குறிப்பாக கோவை பகுதியிலும் பருத்தி சாகுபடியின் வரலாற்றுச் செழுமை, தற்போதைய நிலையில் குறைந்து வரும் பருத்தி சாகுபடி பரப்பளவு, அதை அதிகரிக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கினாா்.

வேளாண் விரிவாக்கக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநா் பி.பொ.முருகன், வேளாண்மையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இயற்கை, அங்கக வேளாண்மை போன்ற புதிய அணுகுமுறைகள், வேளாண் சந்தைப்படுத்தலின் முக்கியத்துவம், பருத்தி சாகுபடியில் இயந்திரமயமாக்குதலின் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து விளக்கினாா்.

பயிற்சிப் பிரிவின் தலைவா் ந.அனந்தராஜா நன்றி கூறினாா். இதைத் தொடா்ந்து விவசாயிகளுக்கு வயல்வெளி அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் பேராசிரியா்கள் ந.பிரேமலதா, ந.வடிவேல், இ.ராஜேஸ்வரி, தம்பிதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT