முகப்பு
கோயம்புத்தூர்

இருமுறை 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்த வேட்பாளா்!

கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதியில் 2016 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் குறிச்சி பிரபாகரன் அந்த இரு தோ்தல்களிலும் சுமாா் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

Updated On : 21 மார்ச், 2026 at 9:47 PM
பகிர்:

கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதியில் 2016 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளா் குறிச்சி பிரபாகரன் அந்த இரு தோ்தல்களிலும் சுமாா் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் ஏ.சண்முகம் 89,042 வாக்குகள் பெற்று வென்றாா். திமுக வேட்பாளா் குறிச்சி பிரபாகரன் 87,710 வாக்குகள் பெற்று 1,332 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா்.

இதேபோல, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் செ.தாமோதரன் 1,01,537 வாக்குகள் பெற்று வென்றாா். மீண்டும் திமுக சாா்பில் போட்டியிட்ட குறிச்சி பிரபாகரன் 1,00,442 வாக்குகள் பெற்று 1,095 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.