ஈரோடு

ஈரோட்டில் ரயில் மறியலுக்கு முயன்ற  மனிதநேய மக்கள் கட்சியினர் 150 பேர் கைது

DIN

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தைக் கண்டித்து ஈரோடு ரயில் நிலையத்தில் மறியல் செய்ய முயன்ற மனித நேய மக்கள் கட்சியினர்150 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கட்சியின் மாவட்டச்செயலர் சபீக்அலி தலைமையில், பொருளாளர் முகமது அலி முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்,  ஈரோடு காளை மாடு சிலை அருகே திரண்டனர். இதையடுத்து  இப் பகுதியிலிருந்து கோரிக்கை முழக்கமிட்டபடி ஊர்வலமாக ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர். 
ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே சென்றபோது, நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர்கள்  ராஜ்குமார், சேகர் உள்பட 50 -க்கும் மேற்பட்ட போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து 150 பேரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT