ஈரோடு

கொடுமுடியில் வருவாய்த் தீர்வாயம்

DIN

கொடுமுடியில் வருவாய்த் தீர்வாயம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  வியாழக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு, ஈரோடு மாவட்ட கோட்டாட்சியர் நர்மதாதேவி தலைமை வகித்தார். வட்டாட்சியர் செ.அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
 இதில், குடிநீர், சாலை வசதி, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை உள்ளிட்டவை கோரி பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.
 வட்டாட்சியர் செ.அசோக்குமார் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதில், சமூக நல பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் நவமணி, வட்ட வழங்கல் அலுவலர் சண்முக சுந்தரம், கிளாம்பாடி உள்வட்டத்தைச் சேர்ந்த புஞ்சை கிளாம்பாடி, நஞ்சை கிளாம்பாடி, நஞ்சை கொளாநல்லி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT