வேளாண் திட்டங்கள் விழிப்புணர்வுப் பிரசாரம்
சத்தியமங்கலத்தை அடுத்த சாணார்பாளையம், உக்கரம் ஆகிய கிராமங்களில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்த சாணார்பாளையம், உக்கரம் ஆகிய கிராமங்களில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
சத்தியமங்கலம் வட்டார வேளாண்மைத் துறை சார்பில் அட்மா எனப்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை கீழ் சாணார்பாளையம், உக்கரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற இப்பிரசாரத்தில் நடனம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலம் வேளாண்துறையில் வழங்கப்படும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள், வேளாண்மை முகமையின் செயல்பாடுகள், திட்டத்தின் நோக்கம் குறித்து கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், சத்தியமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் எம்.சண்முகம், உதவி வேளாண் அலுவலர் லோகநாதன், வட்டார தொழிநுட்ப மேலாளர் கருணாம்பிகை, உதவி அலுவலர் த.நந்தினி ஆகியோர் பங்கேற்றனர்.