முகப்பு
ஈரோடு

கோபி குப்பைக் கிடங்கில் தீ

கோபி அருகே நாயக்கன்காடு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென ஞாயிற்றுக்ழமை தீப்பிடித்தது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கோபி அருகே நாயக்கன்காடு பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென ஞாயிற்றுக்ழமை தீப்பிடித்தது.
 கோபி - ஈரோடு சாலையில் கோபி நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன. இதில், ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. சம்பவ இடத்துக்கு கோபி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடிய பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் கோபி - பாரியூர் சாலை, ஈரோடு சாலை புகை மண்டலமாகக் காணப்பட்டது. 
 இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கொளுத்தும் வெயிலுக்கு குப்பையில் இருந்து மீத்தேன் வாயு  உருவாகி அதன் மூலம் தீப்பற்றி இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →