முகப்பு
ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து 35.5 பவுன் திருட்டு

சித்தோடு அருகே தோல் வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 35.5 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சித்தோடு அருகே தோல் வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 35.5 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
 சித்தோடு, ஆர்.என்.புதூர், சூர்யா நகரைச் சேர்ந்தவர்அந்தோணிதாசன் மகன் சார்லஸ் (51). தோல் வியாபாரியான இவர், தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்கத் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்க்கையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35.5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 
 இதுகுறித்து, சார்லஸ் அளித்த புகாரின்பேரில் சித்தோடு போலீஸார் நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →