அனைத்து வட்டங்களிலும் நாளை அம்மா திட்ட முகாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களைச் சார்ந்த பின்வரும் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஈரோடுஅனைத்து வட்டங்களிலும் நாளை அம்மா திட்ட முகாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களைச் சார்ந்த பின்வரும் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களைச் சார்ந்த பின்வரும் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
ஈரோடு வட்டம் - கரை எல்லப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், மொடக்குறிச்சி வட்டம் - 06-புதூர் சமுதாயக்கூடம், கொடுமுடி வட்டம் - கொடுமுடி, அ. கிராமம் மகுடேஸ்வரர் கோயில் அருகில், பெருந்துறை வட்டம் - சுங்கக்காரன்பாளையம் கிராம சேவை மையம்.
பவானி வட்டம் - குறிச்சி அ, ஆ கிராம ஊராட்சி அலுவலகம், அந்தியூர் வட்டம் - ஒட்டப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம், கோபிசெட்டிபாளையம் வட்டம் - நாகதேவம்பாளையம் ஆ கிராமம் ஊராட்சி அலுவலகம், சத்தியமங்கலம் வட்டம் - உக்கரம் இ கிராம சமுதாயக் கூடம்.
தாளவாடி வட்டம் - ஆசனூர் கிராமம் அரேபாளையம் தொடக்க வேளாண் சங்கம், நம்பியூர் வட்டம் - காரப்பாடி எம்.என்.சி. மண்டபம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 2) நடைபெறும் முகாம்களில் தொடர்புடைய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து உரிய தீர்வைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.