முகப்பு
ஈரோடு

பெருந்துறை  வட்டாரத்தில்  மாடிக் காய்கறித் தோட்டம்

பெருந்துறை வட்டாரத்தில் தமிழக அரசின் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையின் மூலமாக மாடிக் காய்கறித் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

பெருந்துறை வட்டாரத்தில் தமிழக அரசின் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையின் மூலமாக மாடிக் காய்கறித் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, பெருந்துறை மஞ்சள் வணிக வளாகத்தில் செயல்படும் தோட்டக் கலைத் துறையினர் கூறியதாவது:
வீட்டின் மாடியிலோ அல்லது வீட்டின் முன்புறமோ நன்றாக வெயில்படும் இடங்களில் இத்தோட்டத்தை அமைக்கலாம். காய்கறித் தோட்டம் அமைக்கத் தேவையான விதைகள், உரங்கள் தோட்டக்கலைத் துறையின் மூலம் மானிய விலையில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.  
தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், அவரை, கொத்தவரை, கீரை, முள்ளங்கி, பாகல், கொத்தமல்லி விதைகள், ஒரு கிலோ நீரில் கரையும் உரம், 400 கிராம் உயிர் உரம், 6 செடி வளர்க்கும் பைகள், மக்கிய தேங்காய் நார் 12 கிலோ, இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து, செய்முறை புத்தகம் ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →