முகப்பு
ஈரோடு

செல்லிடப்பேசி செயலி மூலமாக விவசாய சேவைகள்: வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

விவசாயிகளுக்கு வீடுதேடி வரும் நவீனத் தொழில்நுட்பமான உழவன்' செல்லிடப்பேசி செயலி மூலமாக ஒன்பது சேவைகள் கிடைக்கும் என கோபி வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

Updated On : 15 மே, 2018 at 1:10 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

விவசாயிகளுக்கு வீடுதேடி வரும் நவீனத் தொழில்நுட்பமான உழவன்' செல்லிடப்பேசி செயலி மூலமாக ஒன்பது சேவைகள் கிடைக்கும் என கோபி வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் நேரடியாக செல்லிடப்பேசி மூலமாகப் பல்வேறு சேவைகளைப் பெறும் விதத்தில் உழவன்' செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:
விவசாய செய்திகளை விவசாயிகளும், பொதுமக்களும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் விதத்தில் தமிழக அரசு சமீபத்தில் உழவன்' எனும் செல்லிடப்பேசி செயலியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ளது. இதில், வேளாண்மைத் துறையின் மானியத் திட்டங்கள், இடுபொருள்களுக்கு முன்பதிவு செய்தல், பயிர்க் காப்பீட்டுத் திட்டம், கடை வாரியாக உரம், விதை, பூச்சி மருந்துகள் இருப்பு விவரம், வானிலை முன்னறிவிப்பு, வேளாண்மை இயந்திரங்கள் வாடகை விவரம், கிராம வாரியாக உதவி வேளாண்மை அலுவலர்களின் வருகை உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட சேவைகள் அடங்கியுள்ளன.
இந்த உழவன்' செல்லிடப்பேசி செயலி வசதியை ஆண்ட்ராய்டு வகை செல்லிடப்பேசிகளில் இருந்து அனைத்து விவசாயிகளும் எளிமையாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன்மூலமாக இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ஏராளமான விவசாயச் செய்திகளை ஒரு நொடியில் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பத்தை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திப் பயனடையலாம்.
மேலும், வேளாண்மைத் துறை மூலமாக நடைபெறும் அனைத்துப் பயிற்சிகளிலும், கூட்டங்களிலும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வது குறித்த செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த வசதியைப் பதிவிறக்கம் செய்ய விரும்பும் விவசாயிகள் கோபி வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.