ஈரோடு

சத்தியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த சின்னட்டிப்பாளையத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த சின்னட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (50). விவசாயியான இவர் 4 க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இவரது மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதுமட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. 
இதுகுறித்து, மருத்துவர்களிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
செப்டம்பர் மாதம் கோமாரி நோய்க்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஆனால், அந்த முகாமில் கொடுக்கப்பட்ட மருந்துகள் எதுவும் கால்நடைகளுக்கு கேட்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். 
மேலும், மருத்துவர்கள் உடனடியாக கோமாரி நோய் தடுப்பு முகாம் அமைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT