முகப்பு
ஈரோடு

ஆசனூரில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஆய்வு

தாளவாடி அருகே உள்ள ஆசனூரில் இரும்புக் கம்பங்கள் அமைப்பதற்கான இடம் ஆய்வு செய்யும் பணியில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி திங்கள்கிழமை ஈடுபட்டார்.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:06 AM
பகிர்:

தாளவாடி அருகே உள்ள ஆசனூரில் இரும்புக் கம்பங்கள் அமைப்பதற்கான இடம் ஆய்வு செய்யும் பணியில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி திங்கள்கிழமை ஈடுபட்டார்.
சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப் பாதை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கியப் பாதையாக திம்பம் மலைப் பாதை உள்ளது.
இந்த மலைப் பாதை வழியாக அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகள் அடிக்கடி பழுதடைந்துவிடுகிறது. மேலும், ஒரு சில நேரங்களில் விபத்துகளும் நடக்கிறது. இதனால், திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், கன ரக வாகனங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி போக்குவரத்து சோதனைச் சாவடியில் நாலரை அடி மீட்டர் உயரத்திலும் 12 அடி அகலத்திலும் கடந்த வாரம்  கம்பங்கள்  அமைக்கப்பட்டன. இந்தக் கம்பங்கள் வழியாக செல்ல முடியாத லாரிகள் திம்பம் மலைப் பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல, தாளவாடி அருகே உள்ள ஆசனூர் சோதனைச் சாவடியிலும் கம்பங்கள் அமைக்க இடம் ஆய்வு செய்யபட்டது. இதில், கோபி  டி.எஸ்.பி. (பொ) செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா, தாளவாடி ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.