ஈரோடு

பவானி ஆற்றில் மூழ்கி 2 பெண்கள் சாவு; ஒரு பெண் மீட்பு, மற்றொருவர் மாயம்

DIN

சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றைக் கடந்தபோது நீரின் வேகம் காரணமாக 13 பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில், 2 பெண்கள் உயிரிழந்தனர், ஒருவர் மீட்கப்பட்டார். மாயமான மற்றொரு பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆலத்துக்கோம்பை காலனியைச் சேர்ந்த சரசாள், மல்லிகா, பெரியஅம்மணி, வசந்தா உள்பட 13 பெண்கள் புதன்கிழமை காலை அங்குள்ள பவானி ஆற்றைக் கடந்து அரியப்பம்பாளையம் சென்றுள்ளனர். அங்கு நடவுப் பணியை முடித்துவிட்டு மீண்டும் 13 பேரும் வீடு திரும்ப ஆலத்துக்கோம்பை பவானி ஆற்றைக் கடந்தனர். 13 பெண்களும் ஒருவருக்கொருவர் கையைப் பிடித்தபடி ஆற்றைக் கடந்தபோது நீரின் வேகம் காரணமாக  அனைவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
 இதில், சரசாள், மல்லிகா, பெரியஅம்மணி, வசந்தா ஆகியோர் மற்றவர்களின் பிடியில் இருந்து விலகி ஆற்றில் மூழ்கினர். நீச்சல் தெரிந்த மற்ற 9 பெண்களும் போராடி கரைக்கு வந்து சேர்ந்தனர். பெண்களின் சப்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்து ஆற்றில் உயிருக்குப் போராடிய மல்லிகா என்ற பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் சரசாள், பெரிய அம்மணி ஆகிய இருவரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாயமான வசந்தாவை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். பவானிசாகர் அணையில் இருந்து முன்னறிவிப்பின்றி 900 கன அடி நீர் திறந்து விடப்பட்டதால், பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பவானி ஆற்றில் குளிக்கத் தடை: சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீர் திறந்துவிடப்படுவதால் வாய்க்காலின் இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கடந்த 3 நாள்களில் அணை பூங்கா, கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இரு ஆண்கள், 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். நீரின் வேகம் அதிகமாக உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்க 3 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறை, சிபிஐ வழக்குகளில் ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் சிசோடியா மேல்முறையீடு: கலால் கொள்கை ’ஊழல்’ விவகாரம்

கொலை வழக்கில் தொடா்புடையவா் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது

சக மாணவியை பிளேடால் தாக்கிய வகுப்புத் தோழி கடும் நடவடிக்கை எடுக்க குடும்பத்தினா் கோரிக்கை

விளையாட்டு விடுதியில் சேர மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT