ஈரோடு

புதிய மருத்துவமனை திறப்பு

ஈரோடு, பெருந்துறை சாலையில் அபிராமி கிட்னி கேர் புதிய மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

DIN

ஈரோடு, பெருந்துறை சாலையில் அபிராமி கிட்னி கேர் புதிய மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 விழாவுக்கு, அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை வகித்தார்.  நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தார்.
 மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார்.
   விழாவில், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு,  மருத்துவர்கள் ரமாமணி, ராஜா, அபுல்ஹாசன், ஜெயபால், சம்பத்குமார், சரவணன், மகாலட்சுமி சரவணன், வேலுசாமி ஆகியோர் பேசினர். 
மருத்துவமனை குறித்து அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் கூறியதாவது: 
ஈரோட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனையை ஆரம்பித்துள்ளோம். 
 அதி நவீன ஆய்வகம், ஸ்கேன் இயந்திரம், அல்ட்ரா சவுண்ட் அறை, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால சிகிச்சை அறை ஆகிய சிறப்பு வசதிகள் இந்த மருத்துவமனையில் செயல்படுகிறது என்றார். டாக்டர் பூர்ணிமா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT