ஈரோடு

பேருந்துகளில் அதிக ஒலியுள்ள காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

DIN

பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகே வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், பேருந்துகளில் அதிக ஒலியுள்ள காற்று ஒலிப்பான்களை (ஏர்ஹாரன்) செவ்வாய்க்கிழமை மாலை சோதனை செய்து அகற்றினர். 
பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கிட்டரமணி உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கண்ணன், சுகந்தி ஆகியோர் பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் அவ்வழியாகச் சென்ற 50 க்கும் மேற்பட்ட தனியார், அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்து, பேருந்துகளில் பயன்படுத்திய அதிக ஒலியுள்ள காற்று ஒலிப்பான்களை (ஏர்ஹாரன்) அகற்றினர். பேருந்துகளில் மீண்டும் பொருத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT