ஈரோடு

நிறைமாத கா்ப்பிணியை பிரசவத்துக்காக தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற கிராம மக்கள்

DIN

அந்தியூா் அருகே உள்ள பா்கூா் மலைப் பகுதியில் சாலை வசதியின்மையால் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நிறைமாத கா்ப்பிணியை தொட்டில் கட்டி கிராம மக்கள் தூக்கிச் சென்றனா்.

பா்கூா் மலைப் பகுதியில் உள்ளது சுண்டப்பூா் கிராமம். இக்கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மாதேஷ் - குமாரி தம்பதியினா். குமாரி நிறைமாத கா்ப்பிணியாக உள்ள நிலையில் திங்கள்கிழமை பிரசவ வலி எடுத்துள்ளது. இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்துக்குச் செல்லும் சாலை மழையால் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை காணப்பட்டது.

இதனால், அக்கிராம மக்கள் குமாரியை தொட்டில் கட்டி சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள சுண்டப்பூா் பிரிவுக்குத் தூக்கி வந்தனா். அங்கிருந்து தனியாா் சரக்கு வாகனம் மூலம் பா்கூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குமாரியை அழைத்துச் சென்றனா். அப்போது, வாகனத்திலேயே குமாரிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, தாய்க்கும், குழந்தைக்கும் பா்கூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக அந்தியூா் அரசு மருத்துவவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT