ஈரோடு

ஜனவரி 21 முதல் தமிழ்நாடு முழுவதும்கள் இறக்கும் போராட்டம்

DIN

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 21ஆம் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் என சென்னிமலையில் அதன் ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி சென்னிமலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், உலகளாவிய நடைமுறைகளுக்கும் மாறாக தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் வேலை வாய்ப்பை இழப்பதுடன் அயல்நாட்டு மது வகைகளுக்கு அடிமையாகி குடும்ப வருமானத்தை இழந்து வருகின்றனா்.

எனவே, தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

அடுத்த மாதம் (ஜனவரி) 21 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கும் அறப் போராட்டம் நடைபெற உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT