ஈரோடு

பருவாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

DIN

பவானியை அடுத்த பருவாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸார் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.7,990ஐக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
சிறு, குறு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கும் பாரதப் பிரதமரின் திட்டத்தில் விண்ணப்பிக்க பருவாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் பணம் வசூலிக்கப்படுதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.புஷ்பராஜ், ஆய்வாளர் எம்.நடராஜ் மற்றும் போலீஸார் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அங்கு திடீர் சோதனை நடத்தினர். 
அப்போது, கணக்கில் வராத ரூ.7,990 கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT