ஈரோடு

கோயில் திருவிழா பிரச்னை: அமைதி பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு

DIN


 ஈரோடு அங்காளம்மன் கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதை அடுத்து வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடந்தது.
ஈரோடு ஐயனாரப்பன் கோயில் வீதியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் குண்டம் திருவிழா வரும் திங்கள்கிழமை துவங்கவுள்ளது. இதில், மூன்று சமூக மக்களுக்கிடையே சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், போலீஸாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.  இதன் அடிப்படையில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர்  பாலசுப்பிரமணி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடந்தது.
இதில், அங்காளம்மன் கோயிலில் கடந்த 3 ஆண்டுகளாக எப்படி திருவிழா நடந்ததோ, அதே முறையில் திருவிழா நடத்த வேண்டும். 
நிகழாண்டு திருவிழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என  அதிகாரிகள் அறிவுறுத்தினர். 
இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து திருவிழாவை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்து கலைந்து சென்றனர். அறநிலையத் துறை அலுவலர், ஈரோடு டவுன் காவல் நிலைய ஆய்வாளர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT