ஈரோடு

அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடு: தாயகம்  திரும்பியோர் கோரிக்கை

DIN

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோருக்கு இலவசமாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
தாயகம் திரும்பியோரின் தாயக மக்கள் வாழ்வுரிமை மையம் சார்பில் அதன் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உறுப்பினர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சி.கதிரவனிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய 1,200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சித்தோடு, மொடக்குறிச்சி, பெருந்துறை என பல்வேறு பகுதிகளில் வசிக்கிறோம். வாடகை வீடுகளில் வசிக்கும் எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் என வலியுறுத்தினோம். இதில் 365 பேர் மட்டும் சித்தோடு அருகே பச்சபாளி என்ற இடத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க விண்ணப்பித்தோம். அதில் 163 பேருக்கு வீடு ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 202 பேருக்கு இன்னும் ஒதுக்கப்படவில்லை.
நாங்கள் தினக்கூலியாக பல்வேறு இடங்களில் பணி செய்வதால் இலவசமாக வீடு வழங்கப்பட்டால் எங்களது மிகப்பெரிய செலவான வீட்டு வாடகை குறையும். இதனிடையே பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிலர் பதிவு செய்துள்ளோம். 
அவ்வாறு பதிவு செய்தவர்களின் ஆதார் எண் படி சித்தோடு அருகே வீடு ஒதுக்கீடு செய்ய தேர்வான தகுதிப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பெயர் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்படுவர். எனவே எங்களுக்கு சித்தோடு அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT