முகப்பு
ஈரோடு

2.5 லட்சம் டன் நெகிழிக் கழிவுகள் அகற்றம்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

ஓடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தேங்கியிருந்த 2.5 லட்சம் டன் நெகிழிக் கழிவுகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரே நாளில் அகற்றியது. 

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:12 am IST
பகிர்:

ஓடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தேங்கியிருந்த 2.5 லட்சம் டன் நெகிழிக் கழிவுகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரே நாளில் அகற்றியது. 
தமிழகத்தில் நெகிழிப் பொருள்களுக்கு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓடைகள், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தேங்கிக் கிடக்கும் நெகிழிக் கழிவுகளை அகற்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நெகிழிக்  கழிவுகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமை வகித்து தொடங்கிவைத்தார். 
உதவி சுற்றுச் சூழல் பொறியாளர்கள் மோகன், செல்வகுமார், உதவிப் பொறியாளர்கள் ராஜ்குமார், ஜோதி வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பவானி சாலையில் சுண்ணாம்பு ஓடையில் இருந்து கிறிஸ்துஜோதி பள்ளி வரையிலும், காலிங்கராயன் வாய்க்காலில் பேபி கால்வாய் பகுதியிலும், மரவாபாளையம் பகுதி, கங்காபுரம் நரிப்பள்ளம் ஓடை, ராசம்பாளையம் பகுதியில் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையிலும், முள்ளாம்பரப்பு, பவானி கோயில் ஆகிய பகுதிகளிலும் நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
ஓடைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து ஓரே நாளில் மட்டும் இரண்டரை டன் நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் சேகரிக்கப்பட்ட நெகிழிக் கழிவுகள் அனைத்தும் மறுசுழற்சி செய்யும் இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.