ஈரோடு

நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்தவர் கைது

DIN

அந்தியூர் அருகே நாட்டுத் துப்பாக்கியைப் பதுக்கி வைத்திருந்த தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
அந்தியூர் பகுதியில் வன விலங்கு வேட்டைக்கு அதிக அளவில் நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக போலீஸார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 10 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில், அந்தியூர் கோவிலூர், விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெருமாள் (50) நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்துள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சென்னம்பட்டி வனப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.  இதையடுத்து, கைது செய்யப்பட்ட பெருமாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT