ஈரோடு

பவானியில் விதிகளை மீறி இயங்கிய 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல்

DIN

பவானியில் உரிய ஆவணங்கள் இல்லாமல், விதிகளை மீறிய இயங்கிய 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. 
பவானி பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல், தகுதிச்சான்று பெறாமல் இயங்கி வருவதாகக் கிடைத்த தகவலின்பேரில் பவானி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி தலைமையில் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். 
இதில், முறையான தகுதிச்சான்று, வரி நிலுவை, முறையான காப்பீடு செய்யப்படாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பவானி அரசு மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விதிகளை மீறிய 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT