ஈரோடு

ஆசிரியர் தகுதித் தேர்வு: 5,171 பேர் பங்கேற்பு

DIN


ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தகுதிக்கான  முதல் தாள் தேர்வை 14 மையங்களில் 5,171 பேர் எழுதினர்.
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர டெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பணியாற்ற தகுதித் தேர்வில் முதல் தாள், 8 ஆம் வகுப்பு வரை பணியாற்ற தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை தொடங்கியது. 
ஈரோடு மாவட்டத்தில் 14 மையங்களில் 5,788 பேர் முதல் தாள் எழுத தகுதி பெற்றிருந்தனர். ஆனால்  தேர்வில் 617 பேர் பங்கேற்கவில்லை.  5,171 பேர் தேர்வு எழுதினர்.  முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக்  கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் என 116 பேர் தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.பாலமுரளி பார்வையிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT