ஈரோடு

சத்தி அருகே மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

DIN


சத்தியமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புன்செய்புளியம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்று வீசியது. காற்றின் காரணமாக மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.
இந்நிலையில், சத்தியமங்கலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் மாதேஸ்வரன் கோயில் அருகே சாலையோரம் இருந்த மரம் காற்றின் வேகம் தாங்காமல் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதன் காரணமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற புன்செய்புளியம்பட்டி போலீஸார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது. மரம் முறிந்து விழுந்ததால் சத்தியமங்கலம்  கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT