ஈரோடு

மடிக்கணினி கேட்டு பள்ளிகளை முற்றுகையிட்ட முன்னாள் மாணவர்கள்

DIN

பவானி, ஆப்பக்கூடல் பகுதிகளில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கக் கோரி முன்னாள் மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். 
பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017-18 ஆம் ஆண்டில் பயின்ற மாணவிகள் 396 பேருக்கும், ஆண்கள் பள்ளியில் 150 மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை.
அதேபோன்று, சிங்கம்பேட்டை அரசுப் பள்ளியில் 160 பேருக்கும், ஆப்பக்கூடல் புதுப்பாளையம் அரசுப் பள்ளியில் 60 பேருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. 
தற்போது, மேல்நிலைக் கல்வி பயில்வோருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வரும்  நிலையில் முன்னாள் மாணவர்களுக்கு முதலில் வழங்க வேண்டும் எனக் கோரி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் பள்ளிகளில் குவிந்தனர். 
பவானி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் குவிந்த மாணவ, மாணவிகளிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க மாணவர்கள் புற்ப்பட்டுச் சென்றனர். மாணவர்கள் முற்றுகையால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் 
இதே போல சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 2017-18 ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த 450 மாணவிகள் மடிக்கணினி கேட்டு பள்ளியில் மனு அளித்து வந்தனர். அப்போது நடப்பு ஆண்டு மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி வரும் நிலையில் தங்களுக்கும் வழங்காமல் அலைகழிக்கப்படுவதாக முன்னாள் மாணவிகள் குற்றம்சாட்டினர்.
பின்னர் பள்ளி முன்பு 100க்கும் மேற்பட்ட மாணவிகள் செவ்வாய்க்கிவமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம், பள்ளி தலைமை ஆசிரியை பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, முன்னாள் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க அரசாணை வெளியிடப்பட்டதாகவும், அந்த அரசாணைப்படி மடிக்கணினி வழங்கப்படும் என அரசு வெளியிட்ட அரசாணையை காண்பித்தார். அதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT