ஈரோடு

டாஸ்மாக் கடையில் தீ விபத்து

கோபி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள், ரொக்கம் எரிந்து நாசமாகின.

DIN


கோபி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள், ரொக்கம் எரிந்து நாசமாகின.
கோபி, நம்பியூர் அருகே உள்ள கோசனம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. 
இந்த கடையில் வெள்ளிக்கிழமை இரவு கடை விற்பனையாளர்கள், கண்காணிப்பாளர் செல்வம் ஆகியோர் விற்பனை செய்த தொகை ரூ. 2 லட்சத்து 35 ஆயிரத்தை கடையினுள் வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் கடையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் இருப்பு இருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை மதியம் விற்பனையாளர்கள் கடையை திறந்தபோது மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோபி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கடையினுள் வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள், ரொக்கம் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT