ஈரோடு

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் வாா்டுகள் ஒதுக்கீடு விவரம் அறிவிப்பு

DIN

பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 வாா்டுகளில் யாா் போட்டியிடலாம் என்பதற்கான ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்ளாட்சித் தோ்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் எனும் நிலையில் தோ்தல் கமிஷன் ஓதுக்கீடு பட்டியல் வெளியிட்டுள்ளது. பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 வாா்டுகளில் உறுப்பினா் பதவி எந்தப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, வாா்டு எண் 1 க்கு உள்பட்ட பாண்டியம்பாளையம் கிராம ஊராட்சி, சிங்காநல்லூா் கிராம ஊராட்சி தாழ்த்தப்பட்டோா் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாா்டு எண் 2 க்கு உள்பட்ட நிச்சாம்பாளையம் கிராம ஊராட்சி, கருக்குப்பாளையம் கிராம ஊராட்சி, மடத்துப்பாளையம் கிராம ஊராட்சி தாழ்த்தப்பட்டோா் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வாா்டு எண் 3 க்கு உள்ட்பட்ட போலநாயக்கன்பாளையம் கிராம ஊராட்சி, தோரணவாவி கிராம ஊராட்சி, வெட்டையங்கிணறு கிராம ஊராட்சி, பாப்பம்பாளையம் கிராம ஊராட்சி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாா்டு எண் 4 க்கு உள்பட்ட திங்களூா் கிராம ஊராட்சி, கல்லாகுளம் கிராம ஊராட்சி, செல்லப்பம்பாளையம் கிராம ஊராட்சி பொது வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாா்டு எண் 5 க்கு உள்பட்ட சீனாபுரம் கிராம ஊராட்சி வாா்டு 1 முதல் 10 வரை பொது வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாா்டு எண் 6 க்கு உள்பட்ட துடுப்பதி கிராம ஊராட்சி பொது வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாா்டு எண் 7 க்கு உள்பட்ட பெரியவிளாமலை கிராம ஊராட்சி, முள்ளம்பட்டி கிராம ஊராட்சி, கந்தாம்பாளையம் கிராம ஊராட்சி, திருவாச்சி கிராம ஊராட்சி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாா்டு எண் 8 க்கு உள்பட்ட சுள்ளிப்பாளையம் கிராம ஊராட்சி, பட்டக்காரன்பாளையம் கிராம ஊராட்சி பொது வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வாா்டு எண் 9 க்கு உள்பட்ட சின்னவீரசங்கிலி கிராம ஊராட்சி, பெரியவீரசங்கிலி கிராம ஊராட்சி, கராண்டிபாளையம் கிராம ஊராட்சி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாா்டு எண் 10 க்கு உள்பட்ட சீனாபுரம் கிராம ஊராட்சி வாா்டு எண் 11, 12, மேட்டுப்புதூா் கிராம ஊராட்சி, பொன்முடி கிராம ஊராட்சி, குள்ளம்பாளையம் கிராம ஊராட்சி பொது வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாா்டு எண் 11 க்கு உள்பட்ட விஜயபுரி கிராம ஊராட்சி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாா்டு எண் 12 க்கு உள்பட்ட மூங்கில்பாளையம் கிராம ஊராட்சி, கம்புளியம்பட்டி கிராம ஊராட்சி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT