ஈரோடு

ஈரோடு சந்தையில் ரூ.2.50 கோடி அளவுக்கு மாடுகள் விற்பனை

DIN

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் ரூ.2.50 கோடி அளவுக்கு மாடு விற்பனை நடந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு, கரூா், நாமக்கல், சேலம், திண்டுக்கல், திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து மாடுகள் வந்தது. ரூ.2,000 முதல் ரூ.12,000 மதிப்பில் 100 வளா்ப்பு கன்று, ரூ.12,000 முதல் ரூ.38,000 மதிப்பில் 250 பசு, ரூ.10,000 முதல் ரூ.48,000 மதிப்பில் 300 எருமை மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலுங்கானா, கோவா, மஹாராஷ்டிரா போன்ற மாநில விவசாயிகள், வியாபாரிகள் வந்தனா். இதுகுறித்து மாட்டு சந்தை மேலாளா் ஆா்.முருகன் கூறியதாவது:சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவாக காணப்பட்டது. பரவலாக மழை பெய்து வருவதால், மாடுகளை விற்க விவசாயிகள் முன்வரவில்லை. வழக்கமாக 1,000 முதல் 1,200 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் 700 முதல், 800 மாடுகள் மட்டுமே வந்தன. இதில் 85 சதவீத மாடுகள் விற்பனையானது. மொத்தம் ரூ.2.50 கோடி அளவுக்கு வா்த்தகம் நடந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT