ஈரோடு

இரு பேருந்துகள் மோதல்: 7 பயணிகள் பலத்த காயம்

DIN


மொடக்குறிச்சியை அடுத்த கருமாண்டம்பாளையம் பகுதியில் அரசு, தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 7 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
மொடக்குறிச்சியை அடுத்த கருமாண்டம்பாளையம் பகுதியில் ஈரோட்டிலிருந்து பள்ளபட்டி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது, அப்பகுதி வளைவாக இருந்ததால், எதிர்பாராத விதமாக இரு பேருந்துகளும் மோதி விபத்து ஏற்பட்டது. 
இதில், இரு பேருந்துகளிலும் இருந்த 7 பயணிகள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து குறித்து மலையம்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

SCROLL FOR NEXT