ஈரோடு

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சட்டம் குறித்த விழிப்புணர்வு

கோபி கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், சைபர் கிரைம் இணையச் சட்டம், குடும்ப நடைமுறைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN


கோபி கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், சைபர் கிரைம் இணையச் சட்டம், குடும்ப நடைமுறைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி எம்.ஜெகநாதன், மாவட்ட உரிமையியல் நடுவர் எஸ்.கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராப் பங்கேற்றனர். மாணவ,  மாணவிகளுக்கு அடிப்படைச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஒழுக்கம், பண்பாடு, கலாசாரம், சைபர் கிரைம் சட்டம், செல்லிடப்பேசி மூலம் ஏற்படும் பாதிப்புகள், வாகனச் சட்டம், சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து வழக்குரைஞர்கள் எஸ்.குணசேகரன், என்.பாலசுப்பிரமணியன் எடுத்துக் கூறினார். 
வணிகவியல்  துறைத் தலைவர் ஏ.செல்வராஜ் வரவேற்றார். நாட்ட நலப்பணித் திட்ட அலுவலர் கே.ராஜேந்திரன் நன்றி  கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், பேராசிரியர்கள் வி.அழகரசன், டி.தமிழ்செல்வி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT