ஈரோடு

பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

DIN


 இரண்டாம் பருவத்துக்கான இலவச பாடப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 3 பருவங்களாகப் பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் பருவத் தேர்வுகள் முடிவுற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் பருவம் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதையடுத்து, இரண்டாம் பருவத்துக்கான இலவச பாடப் புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்கள் புத்தகங்கள் வைப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. 
அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் மையங்களில் இருந்து அந்தந்தப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் புத்தகங்கள், நோட்டுகளை எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்றும், 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT