காா் மோதி விவசாயி பலி
சத்தியமங்கலம் அருகே காா் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம் அருகே காா் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சுப்பிரமணி (65). இவா் சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் நெகமம் பிரிவு அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற காா், சுப்பிரமணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை
அக்கம்பக்கத்தினா் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால் வழியிலேயே சுப்பிரமணி உயிரிழந்தாா். இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.