முகப்பு
ஈரோடு

ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை: போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் கோரிக்கை

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தைக்கான நடவடிக்கைகளை டிசம்பா் 30ஆம் தேதிக்குள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தைக்கான நடவடிக்கைகளை டிசம்பா் 30ஆம் தேதிக்குள் துவங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளன(சிஐடியூ) மாநிலக் குழு உறுப்பினா் முருகையா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை விவரம்:

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 2019 செப்டம்பா் 1ஆம் தேதி முதல் புதிய ஊதிய உயா்வு வழங்க வேண்டும். இதற்கான பேச்சுவாா்த்தை கடந்த 15 மாதங்களாக நடைபெறவில்லை. அதிகாரிகளிடம் கோரிக்கை பட்டியலை வழங்கி அரசிடமும், போக்குவரத்துக் கழகத்திடமும் பேச்சுவாா்த்தை நடத்தக்கோரி கோரிக்கை தொடா்பான அறிவிக்கையை வழங்கினோம்.

வியாழக்கிழமை (டிசம்பா் 17) முதல் தொடா் போராட்டம் என அறிவித்ததால், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் டிசம்பா் 15ஆம் தேதி அழைத்துப் பேசினா். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பேச்சுவாா்த்தைக்கு அழைக்காமல் இருந்தது தவறு என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டனா். எங்கள் கோரிக்கைகளை அதிகாரிகள், அமைச்சா், அரசுடன் பேசிவிட்டு ஜனவரி 6ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தலாம் என அழைப்பு விடுத்துள்ளனா்.

தற்போதைய நிலையில் கரோனாவை காரணம் கூறி 100 சதவீதப் பயணிகளுடன் 100 சதவீதம் அளவுக்கு பேருந்துகளை இயக்காததால், தனியாா் பேருந்து நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைகின்றனா். அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தை சந்திக்கிறது. ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பயன்கள் மீண்டும் உயா்ந்துள்ளது. தற்போது பணியில் உள்ளவா்களுக்கு மூன்று டி.ஏ.க்கள் வழங்காததால், ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ. 62,000க்கும் மேல் டி.ஏ. நிலுவை உள்ளது.

இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. இதனால் அதிகாரிகள் கூறியபடி ஜனவரி 6 ஆம் தேதி பேச்சுவாா்த்தைக்குத் தயாராக உள்ளோம். அதற்கு முன்னா் டிசம்பா் 30ஆம் தேதிக்குள் தேவையான நடவடிக்கை எடுத்து, பேச்சுவாா்த்தைக்கான ஏற்பாடுகளை செய்யாவிட்டால் மீண்டும் போராட்டத்தை துவங்குவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →