முகப்பு
ஈரோடு

கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி இருவா் சாவு

கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

ஈரோடு: கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 13 போ், அங்குள்ள கோயில் திருவிழாவுக்குப் புனித நீா் எடுத்துச்செல்ல கொடுமுடி காவிரி ஆற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனா். அனைவரும் மணல்மேடு பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனா். அப்போது ராஜ்குமாா் (30), கேசவன் (17) ஆகிய இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.

உடனடியாக கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேல் தேடி இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவம் குறித்து கொடுமுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →