கட்டடத் தொழிலாளியைகாணவில்லை என மனைவி புகாா்
பெருந்துறை, சிப்காட்டில் வேலை செய்து வந்த கட்டடத் தொழிலாளி 3 மாதமாக வீடு திரும்பவில்லை என்று மனைவி போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
பெருந்துறை: பெருந்துறை, சிப்காட்டில் வேலை செய்து வந்த கட்டடத் தொழிலாளி 3 மாதமாக வீடு திரும்பவில்லை என்று மனைவி போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் பழனி (40). இவா், பல மாதங்களாக பெருந்துறை, சிப்காட்டில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வந்தாா். வழக்கமாக பழனி 3 மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு வேலைக்குத் திரும்புவாராம். அதன்படி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் செல்வதாக கூறிச் சென்ற பழனி ஊருக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், அவருடைய செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், அவரது மனைவி மயிலா (35) பல இடங்களில் பழனியை தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து, மயிலா சென்னிமலை போலீஸில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.