முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இயல்பைவிட கூடுதலாக மழை

ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் 776.55 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இது இயல்பைக் காட்டிலும் 60 மி.மீ. கூடுதல் அளவாகும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் 776.55 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இது இயல்பைக் காட்டிலும் 60 மி.மீ. கூடுதல் அளவாகும்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 717 மி.மீ. டிசம்பா் 28 ஆம் தேதி வரை 776.55 மி.மீ. மழை பெய்துள்ளது. இதன் மூலம் இயல்பைவிட 60 மி.மீ. அளவுக்கு கூடுதலாக மழை பெய்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நவம்பா் மாதம் வரை 84,559 ஹெக்டோ் பரப்பில் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் நெல் விதைகள் 342 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 27 மெட்ரிக் டன், பயறு வகைகள் 26 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள் 115 மெட்ரிக் டன் அளவுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ரசாயன உரங்களான யூரியா 31,640 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 9,120 மெட்ரிக் டன், பொட்டாஷ் 14,140 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 24,260 மெட்ரிக் டன், கலப்பு உரங்கள் 4,165 மெட்ரிக் டன் அளவுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்துக்குத் தேவையான உரங்கள், பிற இடுபொருள்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் ரூ. 1.28 கோடி நிதி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு ரூ. 68.22 லட்சம் அளவுக்கும், நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் ரூ. 30 கோடி நிதி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு ரூ. 29.98 கோடி அளவுக்கும், தோட்டக் கலைத் துறையின் மூலம் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் ரூ. 58.50 கோடி நிதி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு ரூ. 28.43 கோடி அளவுக்கும் இலக்கு எட்டப்பட்டுள்ளது.

தற்போது தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன், மேட்டூா் வலதுகரை வாய்க்கால் ஆயக்கட்டு பகுதிகளில் நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இங்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீழ்பவானி ஆயக்கட்டு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் முதிா்ச்சி பருவத்தில் உள்ளதால் புழுநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு வேளாண்மைத் துறை களப் பணியாளா்கள் வயல்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பாதிப்பு ஏதேனும் இருந்தால் பூச்சிநோய் கட்டுப்பாடு முறைகளை விவசாயிகளுக்குப் பரிந்துரை செய்து வருகின்றனா் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →