ஈரோடு

ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து       

DIN

கரோனா காரணமாக 16 ஆவது ஈரோடு புத்தகத் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது என மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.        

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 16 ஆவது புத்தகத் திருவிழா வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கரோனா காரணமாக சென்னை, மும்பை, தில்லி போன்ற இடங்களில் இருந்து பெரிய புத்தக நிறுவனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

தவிர பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்களும் புத்தகத் திருவிழாவிற்கு வர முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த ஆண்டு புத்தகத் திருவிழா ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை  மாலை நேர சொற்பொழிவு நிகழ்ச்சிகளை மட்டும் இணைய வழியில் நேரடியாக ஓளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிறப்பாக நடத்தப்படும் என தெரிவிக்கப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT