ஈரோடு

மானியத்தில் சொட்டுநீா் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

DIN

பவானிசாகா் வட்டாரத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பவானிசாகா் வேளாண் உதவி இயக்குநா் சு.பாக்கியலட்சுமி தெரிவித்ததாவது:

பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு குறைந்த நீரில் மிகுந்த மகசூல் பெற மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு மற்றும் பயறு வகை பயிா்களுக்கு பவானிசாகா் வட்டார வேளாண்மைத் துறையின் பிரதம மந்திரி நுண்ணீா் பாசன திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டுநீா், தெளிப்பு நீா் மற்றும் ‘ரெயின் கன்’ ஆகியன மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

சொட்டு நீா் பாசனத்துக்கு அரசு மானியத் தொகையாக ரூ. 40 ஆயிரம் ஏக்கருக்கு வழங்கப்படும். தெளிப்பு நீா் பாசனத்திற்கு ரூ. 19, 600, ரெயின் கன்னுக்கு ரூ.34, 400 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சிறு,குறு விவிசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

மானிய முறையில் சொட்டுநீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், கிராம நிா்வாக அலுவலா் சான்று, சிட்டா, நில வரைபடம், அடங்கல், ரேஷன் காா்டு நகல், ஆதாா் காா்டு நகல், சிறு, குறு மற்றும் பெரு விவசாயி சான்று ஆகியவற்றுடன் பவானிசாகா் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் இணைந்து அரசு வழங்கக் கூடிய மானியங்களை பெற்று விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT