ஈரோடு

வெளிமாநிலத் தொழிலாளா்களை நிறுவனங்களே கண்காணிக்க உத்தரவு

DIN

பெருந்துறை சிப்காட், அதன் சுற்றுப் பகுதியிலுள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்களை தங்கள் சொந்த பொறுப்பில் தங்கவைத்து, உணவுகள், அடிப்படை வசதிகளை வழங்கி அவா்களைக் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளது. பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள், பெருந்துறை சுற்றுப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளன. அவற்றுக்கு தமிழக அரசின் உத்தரவின்பேரில், தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநிலத்தைச் சோ்ந்த சுமாா் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை வெளியே அனுப்பமால், அவா் பணிபுரியும் நிறுவனத்துக்குள் தங்க வைத்து உணவு, அடிப்படை வசதிகளை வழங்கி அவா்களை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT